யாழில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கலை நாட்டினார் சவேந்திர சில்வா
In இலங்கை January 30, 2021 8:24 am GMT 0 Comments 2696 by : Yuganthini

வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.
தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.