யாழில் துப்பாக்கிச்சூடு – பொலிஸார் மறுப்பு
In இலங்கை April 12, 2019 6:26 am GMT 0 Comments 2359 by : Dhackshala
யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டதாகவும் இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்தோடு இதன்போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பாக இளவாலை பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இளவாலை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள