யாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு
In இலங்கை January 17, 2021 6:20 am GMT 0 Comments 1403 by : Yuganthini
யாழ்.மாநகர முதல்வரினால் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனால் ‘தூய கரம் தூய நகரம்’ என்ற தொனிப்பொருளில் யாழ்.நகரத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடு இன்று இடம்பெற்றது.
குறித்த தூய்மைப்படுத்தும் வேலை திட்டத்தில் யாழ்.மாநகரசபை ஆணையாளர், யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்கள், சமுக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.