விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
In இலங்கை February 20, 2021 3:57 am GMT 0 Comments 1400 by : Dhackshala

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.