யாழில் 296 கிலோ கேரளா கஞ்சா அழிப்பு
யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இன்று (சனிக்கிழமை) எரித்து அழிக்கப்பட்டது.
அவ்வகையில், சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான 296 கிலோ கேரளா கஞ்சா போதைப் பொருள் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் எரியூட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் குறித்த வழக்குகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் சான்றுப் பொருள்களான கஞ்சா போதைப் பொருளை எரியூட்டி அழிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய நீதிமன்றப் பதிவாளரின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் குறித்த கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்