யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.