யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.
கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத் தொகுதிகள் மற்றும் 11 மாடிகளைக் கொண்ட பயிலரங்கு, தளங்களையும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.