யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியில் ஒரு மாலிங்க: விடா முயற்சியால் கிடைத்த வெற்றி!

லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில் இடம்பெற்றுள்ள யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியில், வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இணையத்தில் வைரலாக பரவிய காணொளி, யார் இந்த மாலிங்கவை போன்று பந்து வீசுபவர் என்பது தான்.
பின்னர் இவர் செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜ் என அடையாளங் காணப்பட்டார். பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் இன்னாள் மற்றும் பல முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட அவருக்கு பல முன்னாள் வீரர்கள் பயிற்சி அளித்தனர்.
இதுவரை மென் பந்தில் பந்துவீசி அனுபவம் கொண்டிருந்த அவர், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளரின் கவனத்தை ஈர்த்த, செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜ், தற்போது யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸின் 22பேர் கொண்ட அணியில், இடம்பெற்றுள்ளார்.
லசித் மாலிங்க பந்து வீசும் பாணியில், மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீசக் கூடிய செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜ், வடக்கில் ‘கிலினோச்சி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரால் வர்ணிக்கப்படுவதும் உண்டு.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.