யாழ் எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து!
In இலங்கை February 23, 2021 8:49 am GMT 0 Comments 1167 by : Vithushagan

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் பார ஊர்தி ஒன்று விபத்து.
குறித்த விபத்து சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ் நோக்கி பயணித்த இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முன்னே பயணித்த உழவு இயந்திரம் சடுதியாக நிறுத்த முயற்சிக்கப்பட்டமையால் அதன் பின்னால் பயணித்த பார ஊர்தி மோதியுள்ளது.
இதன்போது வாகனம் தடம்புரண்டுள்ளது. எனினும் குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.