யாழ். கிறிஸ்தவ மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை கடிதம்!
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 2:51 am GMT 0 Comments 14426 by : Dhackshala
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவ மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் ஆதவன் செய்தி பிரிவிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடிதம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் தொடரும் என டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளா
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய
-
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு