யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு
In இலங்கை January 10, 2021 5:46 am GMT 0 Comments 1383 by : Yuganthini
யாழ்.சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த விடுதியானது நேற்று (சனிக்கிழமை) இரவு, சம்பிரதாயபூர்வமாக, சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
‘யாழ்.லகூன்’ என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி, ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் எனவும் நவீன வசதிகளுடன் குறித்த விடுதியானது அமைக்கப்பட்டு திறந்து வைக்கப் பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்
குறித்த விருந்தினர் விடுதி திறப்பு நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உப்புல் தெனிய, யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் மொகான் கருணாரட்ன மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.