யாழ். நீதிமன்ற வளாகத்திற்குள் கைவிடப்பட்ட புத்தகப்பையினால் பதற்றம்
In இலங்கை April 25, 2019 9:49 am GMT 0 Comments 2026 by : Dhackshala
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தக பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அந்த பை நீதிமன்றில் வழக்குக்காக வந்த ஒருவருடையது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து பதற்றம் தணிந்துள்ளது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் முன்பக்க வாயிலில் இன்று (வியாழக்கிழமை) காலை உட்புறமாக நீல நிற புத்தகப்பையொன்று காணப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றில் நின்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பையை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். இதன்போது நீதிமன்றுக்கு வழக்குக்காக வந்த ஒருவர் குறித்த பையை தன்னுடையதென உரிமை கோரியுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த நபரை விசாரணை செய்த பொலிஸார், பையையும் சோதனையிட்டதன் பின்னர் அதனை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் நீதிமன்றில் சுமார் 30 நிமிடங்கள் வரை பதற்றநிலை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழம
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.