யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்ற நிலை: சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைப்பு!
In ஆசிரியர் தெரிவு January 8, 2021 7:05 pm GMT 0 Comments 2294 by : Litharsan

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டதை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தடையையும் மீறி பல்கலை வளளாகத்துக்கு உள்ளே சென்ற மாணவர்களும் சட்டத்தரணி க.சுகாஷும் உறுதி செய்துள்ளனர்.
இதேவேளை, பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற அச்ச நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்தழிப்பு!
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.