யு.என்.எச்.சி.ஆர் அறிக்கை: உடனடியாக எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது – அரசாங்கம்
In ஆசிரியர் தெரிவு January 31, 2021 5:34 am GMT 0 Comments 1645 by : Jeyachandran Vithushan

யு.என்.எச்.சி.ஆர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றாலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உடனடியாக எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் குறித்த கோரிக்கையை விடுத்த நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது ஆகவே உடனடியாக அதில் மாற்றங்களை மேற்கொள்ள இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் எனவும் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.