ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு
In இந்தியா January 18, 2021 12:15 pm GMT 0 Comments 1441 by : Jeyachandran Vithushan

ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.