ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் தி.மு.க.வில் இணைவு!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.
இராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும் வகையில் தனது இரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றியிருந்தார். அந்த மன்றத்துக்கு தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதுடன் புதிய நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.
ஆனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், மன்றத்தில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் அவர்கள் சேர்ந்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.