ரஞ்சன் விடுதலையாவதற்கு ஒரே வழி ஜனாதிபதி பொதுமன்னிப்பே – டிலான் பெரேரா
In இலங்கை January 20, 2021 8:03 am GMT 0 Comments 1440 by : Dhackshala

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாவதற்கு ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும் என ஆளுங்கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
மேலும் அதனை பெற்றுக்கொள்ளவே எதிர்க்கட்சி முயற்சிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் ரஞ்சனுக்காக செயற்படுவதாக தெரிவித்துக்கொண்டு அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடுவதை தடுப்பதற்கே சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ரஞ்சனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான தீர்ப்பு, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தொடர்பாக ரஞ்சன் உட்பட எதிர்க்கட்சியினருக்கு நல்ல அபிப்ராயம் இருக்கின்றது என்றும் அதனால் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியதாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ரஞ்சனுக்கு தற்போது உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கி இருக்கின்றது எனவும் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்துக்கு பின்னரே வெளியில் வரமுடியும் எனவம் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு இல்லாவிட்டால் இருக்கும் ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பை பெற்றுக்கொள்வதாகும். அதனால் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரவேண்டும் என தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர், உண்மையாகவே அவருக்காக செயற்படுவதாக இருந்தால், அவருக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.