ரவி கருணாநாயக்க, அலோசியஸ் ஆகியோரை இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரையும் இன்று(புதன்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் அலோசியஸ் கொழும்பு 3இல் அதிசொகுசு தொடர்மாடி ஒன்றைக் கொள்வனவு செய்து அதை நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கியமை குறித்து குற்றம் சாட்டப்பட்ட வழக்கு தொடர்பாகவே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த உத்தரவு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதியினால் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.