ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் கொள்வனவு செய்யக்கூடாது என சில நாடுகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை!

ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கிய துருக்கி மீது தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து துருக்கி ஏற்கனவே ஏவுகணை தடுப்பு தளவாடங்களை வாங்கியுள்ளது.
எனவே தங்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் அதன் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதப்பரவல் துறை உயர் அதிகாரி கிறிஸ்டோபர் ஃபோர்ட் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்க கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.