ராகுல் என்னும் சுனாமி அடித்து செல்லுமா….? மோடி என்னும் அலையை!
July 29, 2018 8:29 am GMT
சில மாதங்களுக்கு முன்பு ‘என்னை மக்களவையில் பேசவிட்டுப் பாருங்கள். நரேந்திர மோடியால் பதில் சொல்லவே முடியாது’ என சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி.
அந்த சவாலுக்கான நாள் நாடாளுமன்றத்தில் ஜூலை 20ஆம் திகதி மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் பொது அரங்கேறியது. அந்தத் தீர்மானம் மோடி அரசால் முறியடிக்கப் பட்டாலும் அதன்போதான ராகுலின் வாதங்கள் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளாக மதம், உணவு, நம்பிக்கைகள், உடைகள் தொடர்பான அன்றாட விடயங்கள் குறித்து மட்டும்தான் விவாதங்கள் சென்று கொண்டிருந்தன நாடாளுமன்ற அமர்வுகளில்.
இந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா 40 ஆண்டுகள் சமுக முன்னேற்றம், பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் பின்னோக்கி சென்றிருக்கிறது என எதிரணியினரால் விமர்சங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ராகுல் காந்தியின் தற்போதைய உரை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து உருவாக்கப்பட்ட ஒரு பிம்பமான நரேந்தர மோடியை 48 எம்.பி.க்களைக் கொண்ட கட்சியின் தலைவர் அரைமணி நேரத்தில் விமர்சித்து ஆற்றியிருக்கும் உரையை இன்றைய இந்தியாவின் நிகழ்காலத் திறமையாகவே நோக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் கடைசி மனிதனின் மனதில் எழக்கூடிய கேள்விகளை எதிரொலித்திருக்கிறார் ராகுல் காந்தி.
உணவு, உடைப் பண்பாடு என அனைத்திலும் புகுந்து மக்களின் மீது கொடூரத் தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறது பாஜக. ஒரு ஏழைத்தாயின் மகனான பிரதமர் மோடி மக்களின் மனக் குமுறல்களை புரியாமல் இருப்பதுதான் வேதனை. இதனைத்தான் கேள்விக் கணைகளாகத் தொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
உண்மையில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் மோடி. ராகுலைப் பார்த்து பாஜகவினர் சிரிக்கும்போது, கோடிக்கணக்கான மக்கள் அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதை உணராமல் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ராகுல் ஒவ்வோர் இந்தியனின் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்றுவிடாமல் கேட்டார்.
ராகுல் காந்தி மக்கள் அவையில் முன்வைத்த கேள்விகள்:
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை வீழ்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கூடுகிறது ஏன்…?
ரபேல் போர் விமானங்களின் விலை கூடுதலுக்குக் காரணம் ரகசியம் என்றீர்களே. ஆனால், பிரான்ஸ் அதிபர் அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன…? ஆகவே நீங்கள் ஒரு பொய்யர் பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராதது ஏன்…?
ஜீயோ விளம்பரங்களில் பிரதமர் படம் வந்தது எப்படி…?
பிரதமர் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கிறாரா…?.
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் என்றீர்களே அது எங்கே…?
இந்தக் கேள்விகனைகளால் ஆடிப் போய் இருத்த நரேந்திர மோடியை, அவர் இருகைக்கே சென்று கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன மனித நேயத்தை. பார்த்து உலகமே வியந்து நின்றது.
நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் விமர்சியுங்கள். கேலியும் கிண்டலுமாகவும் பேசுங்கள். ஆனால், நான் இந்திய நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மனதாக நேசிக்கிறேன் உங்களையும் சேர்த்தே.
இவ்வாறு அன்று நாடாளுமன்றத்தில் சுனாமி அலை அடித்து ஓய்ந்ததுபோல அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார் ராகுல் காந்தி என்றே சொல்லலாம் இந்த அலை அடித்து செல்லுமா ஆளும் இந்துத்துவ அரசை….?
-அற மொழியன்-
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...