ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பாரக் ஒபாமா
In இந்தியா November 13, 2020 10:54 am GMT 0 Comments 1832 by : Yuganthini

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக உள்ளாரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஒபாமா எழுதியுள்ளA Promised Land’ என்ற புத்தகம் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது.
அதில், ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என ஒபாமா தனது புத்தகத்தில் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதாவது, ஆசிரியரிடம் பாடத்தை மனப்பாடம் செய்து, ஒப்புவிக்கும் மாணவரைப் போன்றுதான் ராகுல் காந்தி, அதீத ஆர்வம் கொண்டவராகவே இருக்கின்றார் என ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு விடயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராக ராகுல் காந்தி திகழ்கிறார் எனவும் ஒபாமா எழுதியிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.