ராம் சரணை இயக்கும் பிரம்மாண்ட இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியிருக்கிறன.
‘மகதீரா’ என்ற மொழி மாற்றம் செய்யப்பட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரண்.
தெலுங்கு திரை உலகில் நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கும் மூத்த நடிகரான சிரஞ்சீவி அவர்களின் வாரிசான இவர், இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே தருணத்தில் தயாராகும் இந்தப் படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.