ரொறன்ரோவில் விடுமுறை நாட்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள்!

ரொறன்ரோவில் விடுமுறை நாட்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை காண முடியும் என மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரொறன்ரோவின் முடக்க நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் இன்னும் பலப்படுத்தப்படக்கூடும்.
டிசம்பர் 21ஆம் திகதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் ஃபோர்ட் அரசாங்கத்தை அணுகியுள்ளார். தொற்றுநோயின் தொடக்கத்தில், வசந்த காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த நடவடிக்கைகள் நினைவூட்டுகின்றன.
எல்லோரும் சில அறிவிப்புக்கு தகுதியானவர்கள். அதாவது அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் முடிவு எடுக்கப்பட வேண்டும், நகரின் சுற்றியுள்ள பகுதிகளும் சேர்க்கப்படும்இறுதியில் மாகாண அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.