ரோஹித மீதான இலஞ்ச ஊழல் வழக்கு பெப்ரவரியில் விசாரணைக்கு !
In இலங்கை January 25, 2021 9:27 am GMT 0 Comments 1494 by : Jeyachandran Vithushan

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பெப்ரவரி 5 ஆம் திகதி 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியில் 41.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.