லங்கா பரீமியர் லீக்: ஏழாவது போட்டியில் தம்புள்ள அணி வெற்றி!

நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் அணி 28 ஒட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு கிங்ஸ் அணியுடனானா இந்தப் போட்டி, அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இன்று மாவலை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, சானக 56 ஓட்டங்களையும் சமித் படேல் 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், உதான மற்றும் ருஸ்ஸெல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் சமீர இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு மத்தியூஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 176 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓடடங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அணி சார்பாக லோரி இவன்ஸ் அதிகபட்சமாக 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், சமித் படேல், மலிந்த புஸ்பகுமார, அன்வர் அலி மற்றும் புலின தரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தசுன் சானக தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.