லங்கா பிரீமியர் லீக் முதல் சுற்று இன்றுடன் நிறைவடைந்தது!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றின் 20ஆவதும் இறுதியுமான போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளால் தம்புள்ள வைக்கிங் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில், பதிலுக்கு 204 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 18.5 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதேவேளை, லங்கா பிரீமியர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.
அடுத்த, அரையிறுதிப் போட்டிக்கு தம்புள்ள வைக்கிங், கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் காலி கிளாடியேற்றர்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு மற்றும் காலி அணிகள் மோதுகின்றன.
அத்துடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வரும் 14ஆம் திகதி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாண அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.