லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை!

லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா – சீனா இராணுவம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் எல்லை விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லைக் கட்டுப்பாடுக் கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்குப் பகுதியில் இருந்து படைகளை முழுவதுமாக விலக்குவதற்கு இருதரப்பிலும் ஒன்பதாவது கட்டமாக இராணுவ கொமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.