லண்டன் பங்குச்சந்தை தலைமையகத்தை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!
In இங்கிலாந்து April 25, 2019 8:51 am GMT 0 Comments 2159 by : shiyani
காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் இறுதிநாளான இன்று லண்டன் பங்குச்சந்தை தலைமையகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் (Extinction Rebellion) குழுவினால் கடந்த 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவருவதாக இக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று லண்டன் பங்குச்சந்தை தலைமையகத்தின் நுழைவாயிலில் பசை மூலம் தம்மை இணைத்துக்கொண்டு எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் (Extinction Rebellion) குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று கனரி வொர்ப் (Canary Wharf) ரயில் நிலையத்தில் DLR ரயில் ஒன்றின் மேல் ஏறிநின்று பதாகைகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
லண்டனில் கணிசமான அளவில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்