லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார் வைத்தியர் உமேஷ் பிரசாத்
In இந்தியா December 13, 2020 5:51 am GMT 0 Comments 1416 by : Yuganthini

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடயை சிறுநீரகம் எப்போது வேண்டுமானாலும் செயலிழந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை எழுத்துப் பூர்வமாக அதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக வைத்தியர் உமேஷ் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம்- ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.