லிபிய பதற்றம்: பிரித்தானியா – பிரான்ஸ் கரிசனை!
In இங்கிலாந்து April 6, 2019 5:35 am GMT 0 Comments 2751 by : Varshini
பிரான்ஸ் சென்றுள்ள பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் வெஸ் லே ட்ரியானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரான்ஸின் பிரிட்டனி பிராந்தியத்தில் ஜீ7 உச்சிமாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது, லிபியாவின் இராணுவ நடவடிக்கை குறித்து இரு அமைச்சர்களும் கரிசனை செலுத்தினர். குறிப்பாக கிழக்கு லிபிய இராணுவ தளபதி காலிஃபா ஹப்தர், தலைநகர் திரிப்போலியில் மேற்கொண்டுள்ள இராணுவ தலையீட்டை இரு அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
லிபியாவின் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற தன்மையானது, ஐரோப்பிய நாடுகளுக்கு தாக்கம் செலுத்துமென இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் குறிப்பிட்டனர். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டனர்.
இதேவேளை, லிபியாவின் தற்போதைய நிலை தொடர்பாக ஜீ7 நாடுகள் மிகுந்த கரிசனையுடன் அவதானித்து வருவதாக, மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் ஜெரமி ஹண்ட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வவுனியாவில் 13 பேருக்கு நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கியிருந்த 22 பேரில் இறுதி பத்து பேரும் சடலமாக
-
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்
-
கேஸ்கேட் கிறிஸ்டியன் பாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைய
-
இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் ஹட்டன்- மல்லியப்ப
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்ச
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 22ஆயி
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி