லிபிய மோதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
லிபியாவில் அரச எதிர்ப்பு படைகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தலைநகர் திரிபோலியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தாக்குதலில், இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெனரல் காலிஃபா ஹஃப்தரின் அரச எதிர்ப்பு படைகள், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் முனைப்பில் கடந்த சில நாட்களாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், அரச படைகள் எதிர்த்தாக்குதலை நடத்த, உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சண்டையில் தமது தரப்பில் இதுவரையில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹஃப்தரின் தரப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முனைப்பில், இரண்டு மணித்தியால யுத்த நிறுத்தத்தை ஐ.நா. கோரியிருந்தது.
எனினும், தொடர்ச்சியாக தாக்குதல் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவ
-
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் நேற்று(
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள
-
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க
-
இலங்கைக் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் ஒரு இலங்கை மீனவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது அதிரு
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி