லூவர் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படுகின்றன நோட்ரே டாம் கலைப்படைப்புகள்!
பிரான்ஸ் – நோட்ரே டாம் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட அரியகலைப்படைப்புகள், அருகிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படவுள்ளன.
பிரான்ஸ் கலாசார துறை அமைச்சர் பிரான்க் ரீஸ்டெர், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
தேவாலயத்தில் தீ பரவியதும், தீயணைப்பு திணைக்கள பணியாளர்கள், கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் என அனைவரும் துரிதமாக செயற்பட்டு முக்கிய கலைப்படைப்புகளை அங்கிருந்து அகற்றியதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
குறிப்பாக கிறிஸ்துவின் கிறீடம், 13ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்ட சென். லுயிஸின் நினைவுப் பொருட்கள் யாவும் நகர மண்டபத்திற்கு மாற்றப்பட்டன. அவை தற்போது நகர மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நோட்ரே டாம் தேவாலயம் மீள புனரமைக்கப்படும்வரை அவற்றை லூவர் அருங்காட்சியகத்திற்கு மாற்றவுள்ளதாக கலாசார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய கால கட்டிடக் கலைகளை தன்னகத்தே கொண்டு வானுயர்ந்து காணப்பட்ட நோட்ரே டாம் தேவாலயத்தில் நேற்று மாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2
-
மன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோன
-
வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே
-
தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்
-
35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும
-
சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்ச
-
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ