வடக்கில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு- முழு விபரம்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில், 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ். மாவட்டத்திலிருந்தும், 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், மற்றும் எட்டுப் பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் இதுவரை 805 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில், வவுனியா மாவட்டத்தில் 362 பேரும், யாழ். மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடக், கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இதுவரை வடக்கு மாகாணத்திலே கொரோனா தொற்றினால் மூன்று இறப்புக்கள் பதிவாகியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புக்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இறப்பும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, 2021 ஜனவரி யாழ். போதனா வைத்தியசாலையில் 11 ஆயிரத்து 329 பி.சி.ஆர். பரிசோதனைகளும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நான்காயிரத்து 626 பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.