வடக்கில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம்!
In ஆசிரியர் தெரிவு December 26, 2020 2:35 pm GMT 0 Comments 2257 by : Litharsan

வவுனியாவைச் சேர்ந்த வயோதிபப் பெண் கொரோனா தொற்றினால் இன்று (சனிக்கிழமை) மரணித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
குறித்த பெண் கடந்த இரு தினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த பெண் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று நிமோனியா காச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.