வடக்கில் பயங்கரவாதிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை – சுரேஸ் சாடல்
In இலங்கை May 5, 2019 6:20 am GMT 0 Comments 2948 by : Dhackshala
ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடாது வடக்கில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தவே பாதுகாப்புத் தரப்பினர் முயற்சித்து வருகிறார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பிலும் கிழக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பல காலமாக நிலைகொண்டுள்ளனர். வவுணதீவு பொலிஸ்கொலை, தொடர்ச்சியாக ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, பலர் கைது செய்யப்பட்டமை போன்ற பல செயல்கள் இடம்பெற்ற போதிலும் அதனை பாதுகாப்பு தரப்பினர் கண்டுகொள்ளவில்லை.
தற்போது குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்துவிட்டதாக சர்வதேச நாடுகள் எச்சரிக்கைவிடுக்கின்ற போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தேடாது வடக்கில் புலிகளையே தேட முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ