வடக்கு அயர்லாந்தில் ஆளில்லா போர் விமான திட்டம்!
In இங்கிலாந்து January 25, 2021 9:49 am GMT 0 Comments 1856 by : Anojkiyan

வடக்கு அயர்லாந்தில் புதிய ஆளில்லா போர் விமானத்தை தயாரிப்பதன் மூலம் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
‘விசுவாசமான விங்மேன்’ என்று செல்லப்பெயர் கொண்ட இந்த விமானத்தின் பணிகள் 30 மில்லியன் பவுண்டுகள் அரசாங்க முதலீட்டிற்குப் பிறகு தொடங்கப்பட உள்ளன.
இந்த விமானம், போர் விமானங்களுடன் அதிவேகமாக பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது ஏவுகணைகள், கண்காணிப்பு மற்றும் மின்னணு போர் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
Team Mosquito எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள் முழு அளவிலான விமான சோதனை திட்டத்தை தயாரிக்கும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.