வட்டுக்கோட்டையில் பெண் உயிரிழப்பு- குருதி மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு
In இலங்கை December 14, 2020 2:26 am GMT 0 Comments 1462 by : Yuganthini

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக் காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அராலி கிழக்கைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான மதுசன் பிரபாகினி (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி அவர், வீடு பெருக்கிக் கொண்டிருக்கும்போது மயங்கிச் சரிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.
இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்தவர், 7 நாட்களின் பின்னர்நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.