வட கொரிய தலைவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்!

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் பல மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள தேசிய நல சிந்தனைக் குழுவின் மையத்தின் வட கொரியா நிபுணர் ஹாரி காசியானிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்த நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை வழங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
காசியானிஸ் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘கிம் ஜோங் உன் மற்றும் கிம் குடும்பம் மற்றும் தலைமை வலையமைப்பில் உள்ள பல உயர் அதிகாரிகள் கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசிக்கு நன்றி’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பீட்டர் ஜே. ஹோடெஸ், சினோவாக் பயோடெக் லிமிடெட், கன்சினோ பயோ மற்றும் சினோபிராம் குழு உள்ளிட்ட குறைந்தது மூன்று சீன நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.