வதந்திகளை நம்பவேண்டாம் ; நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு கடிதம்!
In இந்தியா December 18, 2020 5:40 am GMT 0 Comments 1394 by : Krushnamoorthy Dushanthini

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறான வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க மத்திய அரசு தயாராகவுள்ளது.
இந்த சீர்திருத்தங்களை பல விவசாய சங்கங்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளன. வேளாண் அமைச்சர் என்ற வகையில் விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும் நாட்டின் ஒவ்வொரு விவசாயியையும் பதற்றமில்லாமல் செய்வதும் எனது கடமை ஆகும்.
விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமையாகும். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.