வன்னியின் காவலன் சிவசிதம்பரத்தின் 28 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு
In இலங்கை November 9, 2020 4:53 am GMT 0 Comments 1351 by : Yuganthini
வன்னியின் காவலன் என அழைக்கப்பட்ட ப. சிவசிதம்பரத்தின் 28 ஆவது நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, பண்டாரவன்னியன் நற்பணி மன்றத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.