வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
In இலங்கை February 19, 2021 8:57 am GMT 0 Comments 1207 by : Vithushagan
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மதியம் மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.