வன இலாகா பிரிவினரின் செயற்பாடுகளை மீண்டும் சாடியது கூட்டமைப்பு!
வடக்கில் வன இலாகா பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ள மன்னார் – முசளி – காயாக்குழி பகுதி மக்கள் அவர்களது உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் முசளி பிரதேச சபையின் அனுமதியுடன் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த போது வன இலாகா பிரிவினர் அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர்.
வில்பத்தில் காடழிக்கும் போது எதுவும் கூறாத வன இலாகா பிரிவினர், இவ்வாறு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.
இரண்டு ஏக்கர் துப்பரவு செய்யும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வன இலாகா பிரிவினர், இரண்டாயிரம் ஏக்கருக்கு மேலாக காடுகளை அழிக்கும் போது அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.