வரக்காபொல சந்தேகநபருடன் மேலும் இருவர் கைது
In இலங்கை April 24, 2019 4:13 am GMT 0 Comments 2173 by : Dhackshala

வரக்காபொலவில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்புள்ள மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஒருவரும் அவர்களுடன் தொடர்புகொண்டிருந்த மேலும் ஒரு சந்தேகநபருமே ஹெம்மாத்தகம பகுதியில் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வரக்காபொலவில் இன்று காலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து அங்குருவெல்ல பகுதியில் வீடொன்றை சோதனையிட்டபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான மோட்டர்பைக் ஒன்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உய
-
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 33ஆயிரத்து
-
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 126 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழ
-
பொலிவியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பொலிவியாவின் கோச்சபம