வரவு செலவு திட்டத்தின் மூலம் மக்களுக்கு நீண்டகால நிவாரணம் வழங்கப்படும் – அஜித் நிவாட் கப்ரால்
In இலங்கை November 16, 2020 11:44 am GMT 0 Comments 1387 by : Vithushagan

2021 ஆம் ஆண்டுக்காக நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் மூலம் நீண்ட காலத்துக்கு நீடித்து இருக்கக் கூடிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாளை பாராளுமன்றத்தில் சமப்பிக்கப்பவுள்ள 2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், கிராமிய பொருளாதாரம் மற்றும் கிராமிய கைத்தொழில் துறையை மேம்படுத்தி பொருளாதார அடிப்படையை ஏற்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும்; கூறியுள்ளார்.
சௌபாக்கிய தொலைநோக்கை பூர்த்தி செய்வதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் ஏதுவாக அமையும் என்றும் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.