வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம்!
In இலங்கை January 9, 2021 11:09 am GMT 0 Comments 1459 by : Jeyachandran Vithushan

மட்டக்களப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடிகள், மருந்து பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடுவதற்கான கோரிக்கையினை சுகாதார திணைக்களம் விடுத்துள்ளது,
இந்நிலையில் குறித்த முடிவு எட்டப்பட்டதாக இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
புதுவருடத்தினை அமைதியான முறையிலும் வீடுகளில் இருந்து ஏற்பாடுகளை செய்து அமைதியாக கொண்டாடுமாறும் நகர்ப்பகுதிக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.