வலைப்பாடு கடற்கரை சூழலை பாதுகாக்கும் செயற்பாடு இளைஞர்- யுவதிகளினால் முன்னெடுப்பு
In இலங்கை January 25, 2021 3:33 am GMT 0 Comments 1357 by : Yuganthini
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் வலைப்பாடு கடற்கரை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குறித்த துப்பரவு பணியில், சுமார் 30 இளைஞர், யுவதிகள் பங்கேற்றனர்.
கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வு அடுத்துவரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.