வளமான நாட்டை உருவாக்க முடியும் – சரத் வீரசேகர
In இலங்கை November 24, 2020 10:40 am GMT 0 Comments 1453 by : Jeyachandran Vithushan
கடந்த அரசாங்கத்தினாலும் கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாகவும் பலவீனமடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
மூன்றாவது வாசிப்பு விவாதத்தில் பேசிய இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர பொருளாதாரத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் தற்போதைய அரசாங்கம் 4.2 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு ஏற்றுமதி வர்த்தகம் மூலம் 900 மில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு 2021 வரவுசெலவுத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் வளமான நாட்டை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம