வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – இருவர் காயம்
In இலங்கை January 24, 2021 3:38 am GMT 0 Comments 1630 by : Dhackshala

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்த மின்சாரத் தூணுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணி கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த தயாபரன் (வயது 31) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.