வவுனியாவில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்!

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.