வவுனியாவில் கடை ஒன்று தீயில் எரிந்து நாசம்!
In இலங்கை November 9, 2020 5:26 am GMT 0 Comments 1349 by : Vithushagan

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடையொன்று தீப்பற்றியதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இரும்பகம் ஒன்றே இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று அதிகாலை வீதியால் சென்றவர்கள் கடைக்கு மேலாக புகைவருவதை அவதானித்து அருகில் சென்று பார்த்தபோது கடைக்கு உள்ளே தீப்பற்றுவதை அவதானித்து அத்தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
இருப்பினும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் செட்டிகுளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவ இடத்திற்க்கு சென்ற செட்டிக்குளம் பொலிசார் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தெரிவித்துள்ளனர். அவ்விடத்திற்க்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் பொலிசார் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொன்டுவந்தனர்.
இருப்பினும் குறித்த வியாபார நிலையத்திற்குள் இருந்த சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தீப்பற்றலுக்கான காரணம் கடைக்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார ஒழுக்கு எனவும் குறித்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் இத்தீப்பற்றல் தொடர்பான மேலதிக விசாரனைகை வவுனியா செட்டிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.